நாட்டின் சில பகுதிகளுக்கு எட்டு மணித்தியால நீர்வெட்டு!
நாட்டின் சில பகுதிகளில் நாளை 8 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பத்தரமுல்லை, கொஸ்வத்த, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொடை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
நாளை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் காலை 6 மணிவரை இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பட்டபொத்த தண்ணீர்த் தாங்கியின் ஊடாக நீர்விநியோகம் மேற்கொள்ளப்படும் மார்க்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளுக்காகவே இந்த நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படுவதாகவும், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.