சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – தரிசாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி
சுவிஸ் தூதரகம் கடத்தல் வழக்கில் தங்களது விசாரணையைத் தடுக்க முயன்றிருந்தால், ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிராக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சி.ஜ.டி.க்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையின்போது, தனது மடிக்கணினி சி.ஐ.டி.யால் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து தலைமை நீதவான் இதைக் குறிப்பிட்டார்
ஜூன் 4ம் திகதி சி.ஐ.டி.யால் கைப்பற்றப்பட்டது என்று அவரது சார்பான சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் மன்றில் தெரிவித்தார். இதனை மறுத்து மன்றுரைத்த சி.ஐ.டி.யினர் ஜூன் 10 ஆம் திகதியே மடிக்கணினி கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட திகதி தொடர்பான தவறான தகவல் குறித்து வழக்கறிஞர்கள் வருத்தம் தெரிவித்ததுடன், இந்த கூற்றை நிராகரித்த நீதிபதி ஊடகவியலாளர் தரிஷா சார்பிலான சட்டத்தரணியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தரிஷா பெஸ்டியன் விசாரணைக்கு தடையாக இருந்தார் என சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சட் மெரில் ரஞ்சன் லமாஹேவா தெரிவித்திருந்தார். இருப்பினும் ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் விசாரணைகளுக்கு தடையாக இருந்திருப்பின் அவரை விசாரணை செய்யலாம் என்று நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து அடையாளம் தெரியாதோரால் தாம் கடத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாட்டை முன்வைத்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.