கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
எல்பிட்டி - ஊருகஸ்மங்கந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதேல்காவத்த பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நிதி பிரச்சினை தொடர்பிலே மூன்று நபர்களிடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கம் முற்றியதில் அது கைகலப்பாக மாறியதனால் நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டுள்ளதுடன் , மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்த நபர் எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊருகஸ்மங்கந்திய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாரின் பாதுகாப்பில் கீழ் , எல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருகஸ்மங்கந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.