ஸ்ரீலங்காவில் தொடர்ந்து சாவடையும் சிறுத்தைகள்: மர்மத்தை தேடும் அதிகாரிகள்

ஸ்ரீலங்காவில் தொடர்ந்து சாவடையும் சிறுத்தைகள்: மர்மத்தை தேடும் அதிகாரிகள்

கோப்பி மரம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனவளபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லத்தண்ணி நாவலபிட்டி மாபாகந்த பிரதேசத்திலேயே இந்த சிறுத்தை சடலமாக மீட்கப்பட்டள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சிறுத்தையின் சடலம் மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபாகந்த பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் நபர்களால் விலக்குகளுக்கு வைக்கப்படும் வலையில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என வனவள பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விலங்கு வேட்டைக்காக இவ்வாறு வலையை உருவாக்கியவரை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.