வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த அவலம்!

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த அவலம்!

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த அவலம் | Accident Police Investigating Srilanka Jaffna

குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.