சிறிலங்கா விமானப்படை வீரரின் விபரீத முடிவு!
கொழும்பு பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகாமையில் குறித்த சார்ஜன்ட் மேலும் பல வீரர்களுடன் கடமையாற்றும் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.