யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் | Sword Attack On Family Members In Jaffna

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்குத் தெருவில்  சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை காவல்துறைக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.