தொல்பொருள் பிரதேசங்கள் அழிவடையும் அபாயத்தில் இருக்கின்றன : அகிலவிராஜ்!

தொல்பொருள் பிரதேசங்கள் அழிவடையும் அபாயத்தில் இருக்கின்றன : அகிலவிராஜ்!

13 ஆம் நூற்றாண்டில் குருணாகல் பகுதியை ஆண்ட புவனேகபாகு மன்னனினால் கட்டப்பட்ட மண்டப்பத்தினை பாதுகாக்க தொல்பொருள் துறை பணிப்பாளர் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய தொல்பொருள்துறை பணிப்பாளர் கடந்த காலங்களிலும் தொல்பொருள் இடங்களை பாதுகாக்க தவறியுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இப்பகுதியில் அமைந்துள்ள ஏனைய தொல்பொருள் இடங்களும் அழிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வாதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து அரசாங்கம் ஏன் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து ஒளிவுமறைவின்றி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.