மிளகுக்கான கேள்வியை உயர்த்தி விவசாயிகளைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

மிளகுக்கான கேள்வியை உயர்த்தி விவசாயிகளைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

வீழ்ச்சியடைந்துள்ள மிளகுக்கான கேள்வியை உயர்த்தி விவசாயிகளைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

உலகின் மிக உயர்ந்த  மிளகு உற்பத்திர் இலங்கயிலேயே காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உலக சந்தையில் உள்ளூர் மிளகுக்கு நல்ல தேவை இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறைந்த தரமான மிளகு வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூர் மிளகுடன் கலந்து கடந்த சில ஆண்டுகளில் உலக சந்தைக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இலங்கை மிளகு மீது காணப்பட்ட கேள்வி சடுதியாக சரிவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் மிளகு இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும். அதனுடன் மீண்டும் உயர்தர மிளகு ஏற்றுமதி செய்ய வாய்ப்புக் கிடைத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்