இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 12 பேர் படுகாயம்..!
மின்னேரிய - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய தொடருந்து நிலைய சந்தியில் ஒரே திசையில் பயணித்த இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹிகுராக்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து சோமாவதியை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.