இன்றைய ராசி பலன் 23 மே 2023

இன்றைய ராசி பலன் 23 மே 2023

இன்று, செவ்வாய், மே 23, சந்திரனின் சஞ்சாரம் நாள் முழுவதும் மிதுன ராசியில் நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மிதுன ராசிக்காரர்களுக்குக் கலவையான பலன்கள் கிடைக்கும். மறுபுறம், மேஷம், ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நாள் மிகவும் அனுகூலமாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் பார்ப்போம்.

மேஷம் 

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

வெளிநாடுகளில் இருந்து பணம் வரவேண்டியது உள்ளவர்களுக்கு இன்று அதற்கான முயற்சிகள் வெற்றி அடைவதற்கான நாள் அவர் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றியில் முடியும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் என்றாலும் செலவினங்கள் சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது.

வார ராசிபலன்: மே 22 முதல் 28 வரை - மேஷம் முதல் கன்னி வரை : வெற்றியும், லாபமும் ஈட்டும் ராசிகள்

ரிஷபம் 

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

 

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். பிற்பகலில் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

ஜூன் மாத ராசி பலன் 2023: ஜூனில் நடக்கும் கிரக பெயர்ச்சி அதிசயம் : ரிஷபம், விருச்சிகம் உள்ளிட்ட ராசியினர் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்

மிதுனம் மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும். வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உபயோகத்திற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் : ஆணுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் எது? - திருமண பொருத்தம் முழு பட்டியல் இதோ

 

கடகம் கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

 

அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும்.

கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும். வாகன தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய சாதனைகளையும் செய்வார்கள்.

கடகத்தில் செவ்வாய் பகவானுடன் சேரும் சுக்கிரன் : அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

சிம்மம் 

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.

வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும். இவைகளில் வெற்றியும் கிடைக்கும்.

யானை கனவில் வந்தால் நல்லதா, கெட்டதா? வெள்ளை யானை துரத்தினால் என்ன அர்த்தம் தெரியுமா?

கன்னி 

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நாளில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகமாகும் இருப்பினும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள்.
இந்த வாஸ்து பிரச்னை உங்களை ஏழையாக்கலாம்... எதில் கவனம் தேவை தெரியுமா?

துலாம் 

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

இன்று குடும்பம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சியான அனுபவம் ஏற்படும். வாழ்வாதாரத்தை புதிய முயற்சிகள் மூலம் முன்னேற்றுகிறார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களுக்கு மரியாதையும் ஒத்துழைப்பும் போதுமான அளவுக்கு கிடைக்கும். மாலை நேரம் வரை எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மழைக்குப்பின் உங்கள் அன்பான விருந்தினர்களை வரவேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

வார ராசிபலன்: மே 22 முதல் 28 வரை - துலாம் முதல் மீனம் வரை : கஷ்டத்தை வெற்றியாக்கும் ராசிகள்

விருச்சிகம் 

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

இன்று பிள்ளைகள் மற்றும் அவர்களின் வேலையைப் பற்றிய கவலைகளிலேயே நாள்களிலும் திருமண வாழ்வில் பல நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி உறவு இனிமையாக இருக்கும்.

இன்று உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இல்லையெனில் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுபகாரியங்களுக்கான பயணங்களால் செலவுகள் கூடும்.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் : ஆணுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் எது? - திருமண பொருத்தம் முழு பட்டியல் இதோ

 

தனுசு 

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் .பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் தங்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.

காதல் தொடர்பான விஷயங்களில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அவர்களுடைய எண்ணம் இடம்பெறுவார்கள். வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ள நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

உங்கள் வீட்டில் பொருட்களை இப்படி மட்டும் வைத்து விட வேண்டாம்? - வீட்டில் நிம்மதி பெற எளிய விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

மகரம் 

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகளும் அலைச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவர்களில் சற்று நிதானமாக இருக்கவும். பங்கு மார்க்கெட் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு என்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நன்மை அடைவீர்கள்.

கும்பம் 

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான திட்டமிடுதல் நோக்கிக் கொண்டுசெல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை பெரிதாக ஆட்கொள்ளும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சொந்த தொழில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள்.

மீனம் மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள்.

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை காண்பார்கள்.