அனைத்து கடற்படையினரும் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணம்

அனைத்து கடற்படையினரும் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணம்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.