இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறை - தமிழகத்தில் தீர்ப்பு..!
13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த இலங்கையருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான குறித்த இலங்கையர், 2022இல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிணங்க ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.