இன்றைய ராசி பலன் 17 மே 2023

இன்றைய ராசி பலன் 17 மே 2023

இன்றைய ராசிபலன், மே 17, புதன்கிழமை, சந்திரன் மீனத்திலும் பிறகு மேஷ ராசியிலும் சஞ்சரிப்பார். ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சந்திரம் பல ராசிகளுக்கு சிறப்பான் பலனைத் தரும். கன்னி, மிதுனம் ராசிக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இன்று வாங்கிய கடனை அடைப்பது கடினமாக இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

நீங்கள் அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதக நிலை இருக்கும். நீங்கள் கௌரவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் செயல்களால் மகிழ்ச்சியைத் தரும். சில புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

வைகாசி நட்சத்திர பலன் : மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான வைகாசி மாத நட்சத்திர பலன்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அதன் மூலம் லாபம் கிடைக்கும். வண்டி வாகன விஷயத்தில் கவனம் தேவை. காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக பயணம் செய்யுங்கள்.

உங்கள் தொழில், வியாபாரத்தில் பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதில் கவனம் தேவை. மாலையில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்கள் முடிவெடுக்கும் திறன் சிறப்பானதாக இருக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிக்க முடியும்.

வைகாசி மாத ராசிபலன் : 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். பிள்ளைகளின் செயல் உங்களுக்கு மன நிறைவையும், மரியாதையும் பெற்றுத் தரும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் தொல்லைக் கொடுக்கும். பணியிடத்தில் வேலைகளை முடிக்க இடையூறுகள் ஏற்படும். இன்று ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

வார ராசிபலன்: மே 16 முதல் 22 வரை - மேஷம் முதல் கன்னி வரை : கஷ்டங்களை கடந்து வெற்றி பெறும் ராசிகள்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று தாய் வழியில் அன்பும் பாசமும் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஒப்பந்தம் முடிவடையும். வசதி, ஆடம்பரத்திற்காகக் கொஞ்சம் பணம் செலவிட நேரிடும்.

பெற்றோரின் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும். வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் உங்கள் ஆடம்பரத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். உங்கள் எதிரிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலன்கள் அனுபவிப்பீர்கள். அது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

வைகாசி மாத ராசி பலன் : சூரியனைப் போல ஜொலிக்க உள்ள ராசிகள் யார் தெரியுமா?

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கண் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இன்று நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். இனிமையான பேச்சின் மூலம் உறவை பலப்படுத்த முடியும். சில விஷயங்கள் இன்று உங்களுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கும். மன அமைதியைப் பேணுங்கள். பெற்றோரின் ஆதரவாலும், ஆசியும் கிடைத்து நிம்மதி அடைவீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்துச் செல்லவும்.

வைகாசி மாத நட்சத்திர பலன் : சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசிக்கான வைகாசி மாத பலன.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று பயம் இல்லாத உணர்வு இருக்கும், கடினமான காரியங்களை தைரியமாக செய்து வெற்றி பெறுவார்கள். இன்று சில உடல் பிரச்சனைகள் வாழ்க்கை துணையை தொந்தரவு செய்யலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் சிறப்பான லாப வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். இன்று நீங்கள் சொத்து வாங்க சாதகமான நாள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் மரியாதையும், புதிய பொறுப்பும் கிடைக்கும். பெற்றோர் மற்றும் ஆசிரியர் மீது முழு பக்தியும் விசுவாசமும் கொண்டவராக இருப்பார். புதிய முதலீடு செய்ய சிறப்பான நாளாக இருக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.
வரவு சிறப்பாக இருந்தாலும், கொஞ்சம் பணமும் செலவாக வாய்ப்புள்ளது. சகோதரரின் உதவியால் இன்று வரவேண்டி பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது.

வார ராசிபலன்: மே 16 முதல் 22 வரை - துலாம் முதல் மீனம் வரை : பதவி உயர்வு யாருக்கு?

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். மனம் அமைதி கிடைக்கும். சட்ட பிரச்னைகள் தீரும்.

உங்கள் முயற்சிகளுக்கான் பலன் கிடைக்க காத்திருக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் திருமண திட்டம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் தடைகள் நீக்கும். தந்தையின் ஆலோசனை அனுகூலமானதாக இருக்கும்.

வைகாசி மாத நட்சத்திர பலன் : சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசிக்கான வைகாசி மாத பலன்

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று தொண்டு செய்யும் உணர்வு உருவாகும். மாமியார் தரப்பிலிருந்து பணம் பலம் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை பலப்படும். வயிறு சம்பந்தமான சில தொந்தரவு ஏற்படும். எனவே கவனமாக இருக்கவும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த உங்களின் சில பணிகள் , இன்று முடிக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்.

வைகாசி மாத நட்சத்திர பலன் : தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிக்கான வைகாசி மாத பலன்

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பாத சில தேவையற்ற செலவுகள் பிரச்னை ஏற்படுத்தும். இன்று சமூக, சமயப் பணிகளில் ஈடுபாடும், அதில் மதிப்பும் கிடைக்கும்.

உங்கள் தடைப்பட்ட வேலைகள் முடிக்க முடியும். நீங்கள் புதிய வேலைகள், திட்டங்கள் செய்ய சிறப்பான நாள். அது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதால் உங்கள் வேலை, வியாபாரத்தில் புதிய உயரத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் சிறந்த முடிவு எதிர்காலத்தில் அதன் முழு பலனையும் பெறுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. பழைய நண்பரை சந்திக்கவோ, பேசவோ வாய்ப்பும் அதனால் மனதில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று தொழில் சம்பந்தமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். இன்று உலக சுகபோகங்கள் பெருகும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இதுவரை தடைப்பட்டு இருந்த எந்த ஒரு வேலையும் நீங்கள் செய்து முடிக்க முடியும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான நல்ல முடிவை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். இன்று நீங்கள் சமூகத்தில் மரியாதையைப் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்கள் மன உறுதி அதிகரிக்கும். அரசியல் துறையிலும் உங்கள் புகழ் பரவும்.