இன்றைய ராசி பலன் (16 மே 2023)

இன்றைய ராசி பலன் (16 மே 2023)

இன்று நாள் முழுவதும் சந்திரன் மீன ராசியில் சஞ்சரிப்பார். இதனால் மீனம், மகரம், ரிஷபம் உள்ளிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தருவார். சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் நாள் முழுவதும் உள்ளதால் கவனமாக இருக்கவும். 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் பார்ப்போம்.

மேஷம்

-aries

புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும்.

ஒரு சிலருக்கு வலி நல்லது முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

வைகாசி மாத ராசி பலன் : மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான வைகாசி மாத நட்சத்திர பலன்

ரிஷபம் 

-taurus

சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு. உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வைகாசி மாத ராசி பலன் : சூரியனைப் போல ஜொலிக்க உள்ள ராசிகள் யார் தெரியுமா?

மிதுனம் 

-gemini

 

வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு போன்ற காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு அலைச்சல்கள் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையைக் காண்பார்கள்.

தங்கம் வாங்குவது போல கனவு வருதா? அப்போ நீங்க அதிர்ஷ்டசாலி தான், தங்க புதையல் என்ன பலன் தரும் தெரியுமா?

கடகம் 

-cancer

 

புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். ​வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும்.

எதிர்காலத்தை பற்றிய சிந்தனையின் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்களும் மனதில் இடம் புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.

வைகாசி மாதத்தில் எந்த ராசிக்கெல்லாம் தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும்?

சிம்மம் 

-leo

ஒருசிலருக்கு நிறைய அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
 

உங்கள் மொபைல் நம்பர் அதிர்ஷ்டமானதா? - எப்படி எளிமையாக அறிந்து கொள்வது தெரியுமா?

கன்னி 

-virgo

சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

வைகாசி மாத நட்சத்திர பலன் : சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசிக்கான வைகாசி மாத பலன்

துலாம் 

-libra

இன்றைய நாள் உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.

உடல்நலன் நன்றாக இருந்து வரும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில்முன்னேற்றம் கிடைக்கும்.

வைகாசி மாத ராசிபலன் : 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்

விருச்சிகம் 

-scorpio

நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.
 

வைகாசி மாதத்தில் எந்த ராசிக்கெல்லாம் தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும்?

தனுசு 

-sagittarius

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் மாணவராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம்கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது .

மகரம் 

-capricorn

பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவைகளில் வெற்றியும் காண்பீர்கள்.

உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு.

கும்பம் -aquarius

வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும்.
கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு.

மீனம் 

-pisces

வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்
மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு சார்ந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.