சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தெரிவிப்பு
குருணாகல் நகரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்திற்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் குறித்த அறிக்கை இன்றைய தினம் வழங்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சேத விபரங்கள் தொடர்பான கண்காணிப்புக்கள் இடம்பெற்று வருவதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த கட்டடத்திற்கு சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகல படல்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்