இன்றைய ராசி பலன் 11 மே 2023

இன்றைய ராசி பலன் 11 மே 2023

இன்றைய ராசிபலன், மே 11, வியாழக் கிழமை, மகர ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க உள்ளார். செவ்வாய் நீசமடைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சந்திரன், செவ்வாய் ஆகியோரின் மாற்றத்தால் துலாம், ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலை வலுப்பெறும். 12 ராசிகளுக்கான ராசிபலன் இன்று பார்ப்போம்.

மேஷம் 

-aries

ஆன்மீக சிந்தனைகளோடு செல்லும் அருமையான நாள் ஆகும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.
புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவற்றில் வெற்றி கிடைக்கும். இன்று வியாபாரத்தில் தந்தையின் ஆலோசனை நன்மை தர்ம். மாலையில் உங்கள் வீரம் அதிகரிக்கும்.
வைகாசி மாத ராசி பலன்: வெற்றியால் ஜொலிக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா?

ரிஷபம் 

-taurus

வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் ஈடேறும். கல்வி நன்றாக இருக்கும். கல்வியின் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும் உடல் நலம் சீராக இருந்துவரும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் அமைதி தவழும்.
சொந்த தொழில் செய்பவர்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள்.

சனி வக்ர பெயர்ச்சி 2023: சனியின் நல்லருள் யாருக்கு? - தொழில், வியாபாரத்தில் அமோக வெற்றி பெறும் ராசி

மிதுனம் 

-gemini

 

வாகன வகையில் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது கூட்டுத் தொழில் துவங்குவது போன்றவற்றை சற்று தள்ளி வைக்கலாம். இவைகளால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் பெயர்ச்சி 2023 : உடல் பலவீனம், வலிமை குறைய உள்ள ராசிகள்

கடகம் 

-cancer

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அந்த எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.
தனவரவு கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வார ராசிபலன்: மே 9 முதல் 15 வரை - மேஷம் முதல் கன்னி வரை : புதிய வேலை யாருக்கு கிடைக்கும்?

சிம்மம் 

-leo

கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பதற்கிணங்க உங்களுடைய பேச்சு கவனம் தேவை. வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.

காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி பெற்றோருடன் பேச சாதகமான பதில் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.

கன்னி 

-virgo

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான நல்ல நாள் ஆகும்.

துலாம்

-libra

பல புதிய வாய்ப்புகள் தென்படும் படிப்பை முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. பொருளாதார பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் .
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வேலையாட்களால் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும் என்றாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்.

வார ராசிபலன்: மே 9 முதல் 15 வரை - துலாம் முதல் மீனம் வரை :திருமண யோகம் யாருக்கு?

விருச்சிகம் 

-scorpio

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

தனுசு 

-sagittarius

சொந்தத் தொழில் செய்பவர்கள் மனம் நிம்மதி அடையும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு. உடல்நலம் ரீதியான பயம் வந்து விலகும்
உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

தனுசு லக்கினமா உங்களுக்கு? - திருமண யோகம் வந்தாச்சு

மகரம் 

-capricorn

உணவு தொழில் சுற்றுலாத்துறை வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம் ஆயினும் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோனியமாக இருக்கும்.

மகர லக்கினத்திற்கு ஜாதக பொருத்தம் எப்படி பார்ப்பது? எந்த தொழிலில் சிறந்து விளங்குவார்கள் தெரியுமா?

கும்பம் 

-aquarius

திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் மேம்பாடு வார்கள்.

மீனம் 

-pisces

பலருக்கு பிரயாணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பயணத்தால் வெற்றி கிடைக்கும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். சோசியல் மீடியா போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.

நேரத்தில் கவனத்தை செலுத்தவும்.
விசா தொடர்பான காரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆயில் அண்ட் கேஸ் ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவர்.