முற்றாக முடங்கிப் போன கொழும்பு! திண்டாடும் மக்கள்

முற்றாக முடங்கிப் போன கொழும்பு! திண்டாடும் மக்கள்

கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீதிகள் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் இருந்து அடைமழை பெய்து வரும் நிலையில் கொழும்பின் பல்வேறு வீதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் அனைத்து பிரதான வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சீரற்ற காலநிலை இன்று இரவு வரை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.