மொனராகலையில் ஏழு பேருக்கு கொரோனா? மாவட்ட சுகாதார பணிப்பாளர் தகவல்

மொனராகலையில் ஏழு பேருக்கு கொரோனா? மாவட்ட சுகாதார பணிப்பாளர் தகவல்

மொனராகலையில் இருவருக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார பணிப்பாளர் பீ.டீ.கே.அதிகாரி இதை தெரிவித்தார். இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொனராகலை மாவட்டத்தின் புத்தள பிரேதசத்தின் உணவடுன மற்றும் சியம்பலாண்டுவ விமல் ஓய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரும் குறித்த பகுதியில் பழகிய 45 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் பீ.டீ.கே.அதிகாரி தெரிவித்தார்.