இன்றைய ராசி பலன் 07 மே 2023

இன்றைய ராசி பலன் 07 மே 2023

விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சந்திரனால் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்ற் ஷடாஷ்டக் யோகம் உருவாகிறது. இன்றைய கிரக நிலைகளின் அடிப்படையில் ரிஷபம், கடகம், மகர ராசியினருக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சில புதிய மாற்றங்கள் கிடைக்கும். இன்று எந்த விஷயங்களையும் எளிதாக ஏற்றிக் கொள்ளும். இன்று மாலையில் உங்களுக்கு தடைப்பட்ட வேலைகள் சிறப்பாக நடந்து முடிய வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனையும், மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 வெற்றி யாருக்கு?- ஜோதிட கணிப்பு : பாஜக மீண்டும் வெற்றி பெறுமா? காங்கிரஸ், JDS வாய்ப்பு எப்படி

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நாள். இன்று அரசியலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்து மக்களின் ஒத்துழைப்பைப் பெற்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நிர்வாகத்தின் முழுப் பலன்களைப் பெறுவீர்கள்.

நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் பெருகும். திடீரென்று சில வேலைகள் உங்கள் வழக்கமான வேலையை மாற்றலாம். இன்று, வேலைப்பளு இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மனஸ்தாபங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியிலோ, போட்டியிலோ வெற்றி கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று மாலை உங்கள் குடும்பத்தில் குழந்தைகளுடன் நேரத்தை உல்லாசமாக கழிப்பீர்கள். உங்கள் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் சில அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிகம் செலவிட வேண்டியது இருக்கும்.

திருமண பொருத்தம்: பெண்களுக்கு பொருந்தாத ஆண் நட்சத்திரங்கள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று உறுதுணையாக இருக்கும், இன்று உங்கள் பணியில் நற்பெயர், சமூகத் துறையில் மற்றும் பணித் துறையிலும் உயர்வு அதிகரிக்கும். குடும்ப வியாபார பிரச்சனைகள் தீரும். நீங்கள் சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதில் சாதக நிலை இருக்கும். வாழ்வாதாரத்திற்கான நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் முதல் விருச்சிகம் வரை: தனக்கென உறுதியான நிலைப்பாட்டை எடுக்காத ராசிகள்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டத்தின் அருள் இன்று துணைபுரியும். இன்று மக்கள் உங்கள் செயல்பாட்டால் ஈர்க்கப்படுவார்கள். இன்று சில புதிய எதிரிகளும் உருவாகலாம் கவனம். வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும், பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகள் பிஸியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் மன வருத்தம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியிலும் போட்டியிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். இன்று நீங்கள் சட்டம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறலாம். உங்கள் செல்வமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும். இன்று நீங்கள் தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறலாம். மாலையில் ஆன்மிக சென்று மன நிம்மதி அடையலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும், சுபச் செய்திகள் வந்து குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வந்து உறவுகள் வலுவடையும். இன்று காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு பண வருவாய் கிடைக்கும், பணியிடத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உறவுகளில் புதிய பலம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வணிகம் தொடர்பான சில திட்டங்கள் வெற்றியடையும், இது உங்களுக்கு லாபம் அதிகரிக்கத் தொடங்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலையில் கவனம் தேவை. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் இன்று தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் தந்தையின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிக ராசிகாரகளே திருமணத்திற்கு தயாரா? - கல்யாணத்துக்கு ஏற்ற தசா புத்தி இதோ

தனுசு

தனுசு

வேலை தேடும் நபர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் எதிர்காலம் குறித்த கவலை குறையும். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலம் இன்று நல்ல செய்திகள் வந்து சேரும்.

அலுவலகத்தில் உங்களின் பணியில் நற்பெயர் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திட்டத்தை முடிக்கும் வாய்ப்பு இருக்கும். இதைப் பார்த்து உங்கள் எதிரிகளும் உங்களைப் புகழ்வார்கள்.


தனுசு லக்கினமா உங்களுக்கு? - திருமண யோகம் வந்தாச்சு

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாகும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம்.

பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகை இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மாலை நேரத்தை செலவிடுவீர்கள், இதனால் நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் காதல் வாழ்க்கையில் சில மன அழுத்தம் ஏற்படலாம். பணியிடத்தில் கடின உழைப்பு மற்றும் பொறுமையுடன் செயல்பட்டால், நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.

பணிபுரிபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கோபம் மற்றும் பேச்சை கட்டுப்படுத்தி நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைகள் நீங்கும். தொழிலில் முதலீடு செய்ய நினைப்பார்கள் சிறிது காலம் காத்திருப்பது நல்லது. வியாபாரத்தில் முழுமையான லாபம் கிடைக்கும். தொழில், வேலைகளில் செலவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒவ்வொரு சவாலையும் உறுதியாக எதிர்கொள்வீர்கள்.