கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய வசதி!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் இன்று விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆறு பெரிய எக்ஸ்ரே இயந்திரங்கள், வெப்ப உணர்திறன் வெப்பமானிகள் மற்றும் பல சாதனங்கள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் ஊடாக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டும் மின்னணு சாதனங்கள், வெடிபொருட்கள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை துல்லியமாக அடையாளம் காண முடியும்.
உலகின் மிகவும் திறமையான 65 வீதமான விமான நிலையங்களில் தற்போது இந்த சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.