இன்றைய ராசி பலன் 06 மே 2023

இன்றைய ராசி பலன் 06 மே 2023

மே 6-ம் தேதி சனிக்கிழமை நண்பகல் வரை துலா ராசியிலும், அதன் பின்னர் விருச்சிக ராசிக்கு சந்திரன் சஞ்சரிப்பார். இன்று பகல் மூழுவதும் விசாக நட்சத்திரத்தின் சந்திரனின் தாக்கம் இருக்கும். இந்த சூழ்நிலையில், மகரம் மற்றும் விருச்சிகம் ராசிக்கு சாதகமானதாக இருக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் புகழ் உயரும். இன்று திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும் . இன்று நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். குழந்தைகள் தொடர்பான மனக்கவலைகள் ஏற்படலாம். இன்று பகல் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மாலைக்கு மேல் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பணியிடத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

நீசம் அடையும் செவ்வாய் (10 மே 2023) : செவ்வாய் பெயர்ச்சியால் வீரமும், தொழில் வெற்றி கிடைக்க உள்ள ராசிகள்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் துணை நிற்கும் . அன்பான வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் நற்பெயர் கிடைக்கும் . இன்று உங்கள் வேலையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் பிஸியாக இருப்பீர்கள். இன்று ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலன் தரும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள், எதிர்மறை தாக்கத்திலிருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று உங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆலோசனை நற்பெயரை வாங்கித் தரும்.

இன்று நீங்கள் முடிவு எடுக்கும் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இன்று பணிச்சுமை இருந்தாலும் சற்று ஓய்வும் கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் சில பின்னடைவுகள் ஏற்படக்கூடும் எனவே கவனமாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம்.

மே மாத ராசி பலன்: கஷ்டங்கள் நீங்கி நிம்மதியும், வெற்றிகளையும் குவிக்க உள்ள ராசிகள்

கடகம்

கடகம்

கடக ராசிக்கு இன்று சிறப்பான நாள். வாழ்க்கையைப் புத்துணர்ச்சியுடன் புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். நீங்கள் முடிக்க முடியாமல் தடைப்பட்ட வேலைகள் என்று முடிக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலை பேணுவது அவசியம். இன்றிய நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் செலவை கவனமாக செய்யவும். மாணவர்களின் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவும் அவர்களுடன் இளமையான நேரத்தை கழிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 வெற்றி யாருக்கு?-

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியினர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லை குறையும் அவர்கள் நண்பராக மாறுவார்கள் என்று புள்ளி இன்று பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் படிப்பு மேம்படும். குடும்பத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்காது. இன்று, வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பின் பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். ஆனால் பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதெல்லாம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கிறதோ அப்போதுதான் சில தடைகள் வரும் என்பதால் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். மாலையில், நண்பர்களின் உதவியால், உங்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களுடன் மோதும் சூழ்நிலை இன்று வர வேண்டாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தகராறுகள் தீரும். பணியிடத்தில், இன்று நீங்கள் சில புதிய திட்டங்களை செயல்படுத்தலாம்.

எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் போட்டியாளர்களை விட அதிக லாபம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்களைச் செய்வதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்கள் கோபப்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நாளில், உங்களுக்குள் ஆன்மிக உணர்வுகள் எழும். வேலை மற்றும் வியாபாரத்தில் சில புதுமைகளைக் கொண்டு வர முடியும். இன்று உங்களுக்கு வெளி நபருடன் வாக்குவாதம் ஏற்படலாம், அதனால் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாலை நேரத்தை குடும்பத்தினருடன் உல்லாசமாக கழிப்பீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நலனில் கவனம் செலுத்தவும். இன்று பணிபுரியும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். வங்கியில் கடன் வாங்க நினைத்தால் அதற்கு ஏற்ற நாள். இன்று வேலையில் முன்னேற்றமும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கவனமாகவும், தகுந்த ஆலோசனையும் தேவை.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நாள் மற்றும் தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் சகோதர சகோதரிகளின் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை நீங்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளையின் கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அரசாங்க வேலைகளுடன் தொடர்புடையவர்கள் இன்று நேர்மையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் சோம்பலைக் கைவிட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாள் இல்லை. உங்கள் உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வெளியில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்கவும். அவசரப்பட்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் செயல் மன கஷ்டத்தை தரும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான நல்ல செய்தியும் கேட்க வாய்ப்புள்ளது. இதில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ள நாள். இன்று தொழில், வியாபாரம், வேலையில் முக்க்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். ரிஸ்கான வேலைகளில் கவனம். உடன்பிறந்தவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும், வருமானம் குறைவாக இருக்கும், இருப்பினும் சமாளிக்க முடியும். குடும்பத்தில் நடக்கும் சச்சரவுகளை பொறுமையுடனும், மென்மையான கையாளவும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுவீர்கள்.