பாதாள உலக குழு உறுப்பினர் இருவர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர் இருவர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர் இருவர் மீரிஹான காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சமிந்த குமார எனப்படும் கடுவலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன், பாதாள உலகக்குழு தலைவர் சமயங்கவின் உதவியாளர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பாதாள உலக குழு தலைவர் சமயங்க என்பவரின் ஹெரோயின் வியாபாரம் மற்றும் நிதி விடயங்களின் செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

42 வயதுடைய குறித்த நபர் இதற்கு முன்னர் ஒரு முறை தெமட்டகொட பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றைய நபர் சமகி மாவத்தை, தெதிகம பிரதேசத்தினை சேர்ந்த ஜகன் குஷான் என்பதுடன் குறித்த நபர் ஊறு ஜூவாகே என்வரின் பாதாள உலக குழு உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த நபர், ரணால பிரதேசத்தில் ஷாமர என்பவரின் கொலையுடனான சந்தேக நபர் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஊறு ஜூவாகே வின் போதை பொருள் மற்றும் நிதி விடயங்கள் தொடர்பிலான சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.