தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மே 1

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மே 1

சில நாட்களுக்கு முன்பு உலக அளவில் 12மணி நேர வேலைநேர மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்த்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அதற்கும் இந்த மே தினத்துக்கு முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது. ஆம், தொழிலாளர்கள் 16 மணிநேரத்திற்கும் மேலாக முதலாளிகளால் சுரண்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

அதை எதிர்த்து பல ஆண்டுகள் போராடி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்று கொண்டுவந்ததன் அடையாளம்தான் இந்த மே தினம்.

அதன் வரலாறு மற்றும் முக்கிய அம்சங்களை இந்த கட்டுரை தொகுப்பில் காணலாம்.

1880கள் காலகட்டத்தில் உலகம் முழுவதும் 16 முதல் 18 மணிநேரங்கள் வரை தொழிலாளர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நல்ல உறக்கம், நல்ல உணவு, நல்ல உறைவிடம் என்பதெல்லாம் பணக்கார வர்க்கத்திற்கு சொந்தமானதாக மட்டுமே இருந்தது.

இதை எதிர்த்து தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. அதில் முக்கியமானது மே 3,4 சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம்.

குறித்த போராட்டத்தில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 7 தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலடப்பட்டனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மே 1 | International Workers Day May Day May 1

தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வர 1889 ஜூலை மாதம் 14ம் திகதி உலக தொழிலாளர்களின் சர்வதேச கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் வர்க்கத்தின் கடவுளாக பார்க்கப்படும் காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதில் காரல் மார்க்ஸ் தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கவும், மே 1ஐ உலக தொழிலாளர் தினமாக கொண்டாடவும் அறைகூவல் விடுத்தார்.

அதில் இருந்துதான் மே தினம் இந்த தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக இந்த தினத்தையே தொழிலாளர் தினமாக கொண்டாடவும் ஆரம்பித்தனர்.

ஆசியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது சமூகநீதி மண் என்றழைக்கப்படும் இந்தியாவின் தமிழக சங்கத்தினரால்தான்.

உழைப்பின்றி இங்கு எதுவுமே மாறவில்லை. நெருப்பு கோளமாக இருந்த பூமி கூட தொடர்ந்து தன்னை குளிர்வித்துக்கொள்ள இயங்கி கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மே 1 | International Workers Day May Day May 1

அப்படியான வழியில் வந்த மனிதர்களும் இந்த நாகரிக நிலையை அடைய பெரும் உழைப்பை தியாகம் செய்தே இந்த நிலையை அடைந்துள்ளனர். என்னதான், தொழிலாளர் வர்க்கம் ஓடாய் தேய்ந்து மாடாய் உழைத்தாலும், அதன் பலன்கள் என்னவோ ஒரு சில முதலாளிகளை மட்டுமே சென்றடைகிறது.

அதனாலேயே பல உரிமை போராட்டங்களும், உயிர் தியாகங்களும் செய்ய வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் ஆண்டுதோறும் மே 1 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மனிதர்கள் 16 மற்றும் அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்து கொண்டிருந்தபோது சிந்திக்க முடியாதவர்களாக, வேலை வேலை என அது சார்ந்து மட்டும் இயங்கும் இயந்திரங்களை போல அடிமையாக இருந்தனர்.

ஆனால், 8 மணிநேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணிநேரம் ஓய்வு(படிக்க, விளையாட, மேலும் பல) என்று இருந்தால் மட்டுமே அவர்கள் மனித வாழ்வு வாழ்வதற்கான அர்த்தம் என்று முன்வைத்தவர் காரல் மார்க்ஸ்.

அதையேதான் அறிவியல் ஆதாரங்களும் நிரூபிக்கின்றன. அன்றே காரல் மார்க்ஸ் இந்த கோரிக்கைகளை உருவாக்காமல் போயிருந்தால் இந்த உரிமைகளும் கிடைக்காமல் போயிருக்கலாம்.

மே தினத்தை துவங்கிய காரல் மார்க்ஸ் ஒரு சில உழைப்பாளர்களுக்கான தத்துவ வரிகளையும் விதைத்து விட்டு சென்றுள்ளார்.

உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமை சங்கிலியை தவிர், முதலாளித்துவம்.

“ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு. ஆனால், அது அவனுக்கு சொந்தமல்ல, அதை காசு கொடுத்து வாங்குபவனுக்கு சொந்தம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் தனக்காக மீன் வாங்கி கொள்ளும் அளவுக்கான காசு இவனுக்கு கிடைக்கும். முதலாளியிடம் சுரண்டப்படும் தொழிலாளி முடிவில் தனது கூலியை பணமாக பெற்றுக்கொண்டு உடனே, முதலாளித்துவத்தின் பிற பகுதியினரான வீட்டு சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர் என பலரிடமும் சிக்கிக்கொள்கிறார். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தேடிக்கொள்ளும்.”என தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மே 1 | International Workers Day May Day May 1

முதலாளித்துவத்திற்கு எதிராக பல கிளர்ச்சிகள் அறிமுகமாக தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்கவில் Hay Market Square என்ற இடத்தில் 40,000 க்கு அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தனர்.

இப் போரட்டத்தின் 3ம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே பாரியதோர் கலவரம் ஒன்றுக்கு வித்திட்டது.

இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர்.

உலக வரலாற்றில் Hay Market Square விவகாரம் போன்றதொறு நிகழ்வொன்று தொழிலாளர் வர்கத்தினருக்கு ஆதரவாக இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே 1989 ஆண்டு முதல் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையின் ஆரம்ப காலத்தில் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ம் ஆண்டு தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் கோடிட்ட சிவப்பு உடை அணிந்து, மேள தாள நடனத்துடன் தற்போதைய Price Park முதல் Galle Face Green மைதானம் வரை நடைப்பெற்றதாக சித்தரிக்கப்படுகின்றது.

இதுவே 1956 ஆம் ஆண்டு S. W. R. D. பண்டாரநாயக்க பிரதம மந்திரி காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளதோடு, அரைப் போத்தல் மதுபாணத்திற்கும், 1000 ரூபாய் பணத்திற்கும் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக எம் மக்கள் மாறியுள்ளனர் என்பது வேதனை அழிக்கின்றது.

முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, கூட்டுறவுகள் மூலம் நாட்டை ஒன்றுபடுத்தி சிறந்ததோர் எதிர்காலத்திற்கு நான், நீ, என எல்லோரும் ஒன்றுபடுவோம்.