வெலிக்கடை சிறைச்சாலையில் திடீர் சோதனை - மீட்கப்பட்டுள்ள பொருட்கள்...!

வெலிக்கடை சிறைச்சாலையில் திடீர் சோதனை - மீட்கப்பட்டுள்ள பொருட்கள்...!

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கை இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் கடமைநேர அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இதற்கமைய 400 கிராம் ஹெரோயின் போதை பொரும், 19 கையடக்க தொலைபேசிகள், 9 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்குரிய 165 மின்கலங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் 70 பெண்கள் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.