கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

நாடளாவிய ரீதியில்  6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படல் நடைமுறையை முடித்த மேலும் 6 பேர் இன்று (திங்கட்கிழமை) கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, தேசிய செயற்பாட்டு நிலையங்களிலிருந்து, இதுவரை 24,203 பேர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை முடித்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, 10 பேர் கட்டாரிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.