பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 23ஆம் திகதி கையளிப்பு

பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 23ஆம் திகதி கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைக்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமரிடம் வழங்கப்படவுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இன்றைய நாளில் அதற்கு ஏற்ப இடைக்கால அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இன்று தொடங்குமென குழுவின் தலைவர் தெரிவித்தார். குறித்த அரசவை கடந்த 15ஆம் திகதி தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.