இன்றைய ராசி பலன் 27 ஏப்ரல் 2023

இன்றைய ராசி பலன் 27 ஏப்ரல் 2023

இன்று, கடக ராசியில் அதன் அதிபதியான சந்திரனின் தொடர்பு நாள் முழுவதும் இருப்பதோடு, மேஷ ராசியில் குருவும் அவரின் பார்வை சந்திரன் பெறுவதால் சிறப்பான நாளாகவும், குரு புஷ்ய யோகம் உருவாகிறது. குரு உதயமும், கஜகேசரி யோகமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று பலன் அளிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிக விசேஷ நாளாக இருக்கும். அலுவலகத்தில் எதிரிகள் விஷயத்தில் சற்று கவனமாக நடக்க வேண்டும். இன்று தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறலாம். இன்று உங்கள் சகோதரரின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம். இன்று மாலை உங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள்.
சனியின் அருள் உங்களுக்கு முழுமையா கிடைக்க வேண்டுமா? - சனி உங்கள் ஜாதகத்தில் இருந்தால் இப்படி தான் நடக்கும்

ரிஷபம்

ரிஷபம்

இன்று ரிஷபம் ராசிக்காரர்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இன்று குடும்பத்தின் சூழ்நிலையும் அமைதியாக இருக்கும். தொழிலதிபர்கள் இன்றைய நேரத்தைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை பெற முடியும். புதிய சொத்து வாங்க திட்டமிட்டுள்ளவர்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 ராசிகள்

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். இன்று நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து உங்கள் தொழிலை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்தவும்.

குரு உதயம் 2023 : சின்ன முயற்சிக்கு பெரிய லாபம் தயாராக இருக்க வேண்டிய 5 ராசிகள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று சட்ட விஷயங்களில் வெற்றிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இன்று நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்களை உறவினர்கள் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தால் நல்ல பணப் பலன்களைப் பெறலாம். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் அதிகமாக செலவழிக்க நேரிடும்.

புதாதித்ய யோகம் 2023 : 5 ராசிக்கு ஒரு மாதத்திற்கு வெற்றிக்கு பஞ்சமிருக்காது

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கை சற்று சிரமமாக இருக்கும். உண்மையில், இன்று குடும்பத்தின் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று பணத்தை முதலீடு செய்யாமல் இருந்தால் நல்லது. எதிர்காலத்தில் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

கனவில் பல்லியைப் பார்த்தால் ஆபத்தா? - பல்லி கனவில் வருவதன் அர்த்தம், பரிகாரம் இதோ

கன்னி

கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் வேலை மாற நினைத்தவர்கள் அந்த முயற்சியில் இன்று ஈடுபட வேண்டாம். பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.

கடன் வாங்கும் முயற்சியில் உள்ளவர்கள் அதில் கவனமும், அது தேவை தானா என்பதை உணர்ந்து செயல்படவும். உங்கள் வேலை அல்லது வியாபாரத் துறையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியினர் அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு குருவின் அருள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இன்று உற்றார் உறவினர்களுடன் இனிய சந்திப்பை மேற்கொள்வீர்கள். மாலையில் நல்ல செய்தி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். நெருங்கிய நண்பரின் உதவியுடன், உங்கள் குழப்பமான விஷயங்கள், வேலைகளில் வெற்றி பெறலாம்.

மாணவர்கள் கடின உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று நீங்கி மன அமைதியைப் பெறுவீர்கள். இன்று உங்கள் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணியில் சிறப்பான பங்களிப்பு செய்வீர்கள். ஒரு நிபுணரின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அம்மாவின் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பொருளாதார நிலை உங்கள் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் அளவு இல்லாமல் போகலாம். அதனால் நிதி விஷயங்களில் கவனம் தேவை. பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பண லாபம் உண்டாகும். இன்று உங்கள் மூதாதையர் சொத்துக்களில் இருந்து பலன்களைப் பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் வாழ்க்கை துணையுடன் சில மன கசப்பு உண்டாகலாம். காதல் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லும். இன்று குடும்ப பிரச்சனைகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்வீர்கள். குழந்தையின் திருமணம் குறித்து பேசுவீர்கள்.

மகரம்

மகரம்

இன்று மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மன அமைதியும் கிடைக்கும். குடும்பச் சொத்துக் கிடைத்த பிறகு யோகம் அதிகம். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கையில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் உறவுகள் மோசமடையக்கூடும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள், உயர்கல்வி தொடர்பான நிதிப் பிரச்சனை இன்று தீரும். உங்கள் தகுதிக்கேற்ற முன்னேற்றமும், பதவி உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாப குறைவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் விஷயங்களில் தடைகள் நீங்கும் நாளாக இருக்கும். இன்று சுப நிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சிறக்கும். பொழுதுபோக்கில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிப்பது நன்மை பயக்கும். இன்று பணியிடத்தில் ஆர்வத்துடன் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.