மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் ஆடி அமாவாசை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) பிதிர்க் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
அத்தோடு ஆலயத்தில் நெய் விளக்குகளை ஏற்றி பெருமானுக்கு மோட்ச விளக்குகளை ஏற்றி பக்தர்கள் நிறைவேற்றினர். அத்தோடு இறந்தவர்களின் ஆன்மா கிடைத்ததற்காக அடியவர்கள் கடமைகளை நிறைவேற்றியதை காணக்கூடியதாக இருந்தது
குறித்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் ஆன்ம ஈடேற்றம் வேண்டி திருக்கேதீஸ்வர பாலாவி தீர்த்தத்தில் நீராடி பிதிர் கடன்களை மக்கள் நிறைவேற்றினர்.
அத்தோடு, முல்லைத்தீவு கேருடமடு பிள்ளையார் ஆலயத்திலும் ஆடியமாவசை நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.