இன்றைய ராசி பலன் -26 ஏப்ரல் 2023

இன்றைய ராசி பலன் -26 ஏப்ரல் 2023

இன்று, ஏப்ரல் 26 புதன்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். சந்திரன் இன்று திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளதால் இன்று ரிஷபம் ராசிக்காரர்களின் நாள் பரபரப்பாக இருக்கும். சிம்ம ராசிக்கு சிறப்பானதாக இருக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாள். இன்று நீங்கள் பணியிடத்திலும் அலுவலகத்திலும் புதிய பொறுப்புகள் பெறலாம். நீங்கள் கடினமாக உழைத்தால், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இன்று உங்கள் குழந்தையின் திருமணம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். ஆனால் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கனவில் பல்லியைப் பார்த்தால் ஆபத்தா? - பல்லி கனவில் வருவதன் அர்த்தம், பரிகாரம் இதோ

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். எந்த வேலையையும் முடிக்க, தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பீர்கள், மனதளவில் கவலை ஏற்படலாம். இன்று, உலக சுகபோகங்களை அனுபவிப்பீர்கள்.

இன்று வணிக சூழலில் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தில் உள்ள முதியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள், அவர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

வீட்டருகே கோவில் இருக்கா? இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க - வாஸ்து சாஸ்திரம்

மிதுனம்

மிதுனம்

இன்று, மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை சாதகமாக இருக்கும். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு மரியாதை கிடைக்கும். கூட்டுத் தொழிலில் செய்பவர்கள் தங்கள் பங்குதாரருடன் ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷன் ஏற்படலாம். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.

பொருளாதார விஷயங்களில் அனுகூலமான நாள், எங்கிருந்தோ பணம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மன உளைச்சலில் இருந்து சற்று விடுபடுவீர்கள்.
குரு உதயம் 2023 : சின்ன முயற்சிக்கு பெரிய லாபம் தயாராக இருக்க வேண்டிய 5 ராசிகள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நல்ல நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். இன்று உங்கள் தொழிலில் உங்கள் நிலை செல்வாக்கு அதிகரிக்கும். பண வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி கிடைக்கும். மாலையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சி, திருவிழாவிலும் பங்கேற்க வாய்ப்பு உண்டு. அரசியல் மற்றும் சமூகத் துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

புதாதித்ய யோகம் 2023 : 5 ராசிக்கு ஒரு மாதத்திற்கு வெற்றிக்கு பஞ்சமிருக்காது !

சிம்மம்

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாள். இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். எந்த ஒரு முக்கிய வேலையும் இன்று தந்தையின் உதவியால் முடிவடையும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் இன்று நீங்கும். நீங்கள் வணிகத்தில் இருக்கும், உங்கள் பிரச்சனை எளிதில் தீரும். வேலை தேடும் இளைஞர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முயற்சிக்க வேண்டும்.

குழந்தையின்மைக்கான தீர்வு : இந்த ஜோதிட விஷயங்கள் கவனித்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆபத்தான வேலை செய்யவோ, கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்ல வேண்டாம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். அலுவலகத்தில் புதிய மாற்றம் ஏற்படலாம். பெண் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

வார ராசிபலன்: ஏப்ரல் 24 முதல் 30 வரை - மேஷம் முதல் கன்னி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள். அரசியலில் ஈடுபடுபவர்கள் பல நன்மைகளை காண்பதுடன் பொதுமக்களின் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டில் தடைபட்ட பழைய பணிகளை முடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் சோம்பலில் இருந்து விடுபட வேண்டிய நாள். இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

வார ராசிபலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை - துலாம் முதல் மீனம் வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று காதல் வாழ்க்கை மற்றும் உறவினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால் அது பேச்சுவார்த்தை மூலம் தீரும். இன்று பெண் நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். இன்று குழந்தையின் எதிர்காலம் குறித்து சிறிது கவலைகள் ஏற்படலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் வணிக விஷயங்களில் சில ஆபத்தான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். இன்று பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். இன்று உங்கள் ஆலோசனை பணியிடத்தில் வரவேற்கப்படும், உங்கள் பேச்சால் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் சில அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். உங்கள் பணி இடத்தில் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். உங்கள் எல்லா வேலைகளையும் நீங்கள் சரியாக முடிக்க முயலவும். இல்லையெனில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இன்று கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம். சுகபோகங்கள் பாதிக்கப்படும். இன்று வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு மன அமைதியை தரும். வியாபாரத்தில் பண, பொருளாதார விஷயங்களில் குழப்பம் ஏற்படும்.

வியாபாரத்தில் பண, பொருளாதார விஷயங்களில் குழப்பம் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று குழப்பம் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல் துறையில் உங்கள் செயல்பாடு, செல்வாக்கு அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். ஆன்மிக பணிகளுக்காக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமாக இருக்கும். நிதி விஷயங்களில், உங்களுக்கு லாபம் கிடைக்கும், டெபாசிட் செய்யப்பட்ட பணம் அதிகரிக்கும். தாய் வழியில் மரியாதை பெறுவீர்கள். இன்று நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் குழந்தைகளுடன் சுமுகமாக இருக்கும், அதனால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீட்டில் லாபம் கிடைக்கும். இன்று, உங்கள் பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.