இன்றைய ராசி பலன் 25 ஏப்ரல் 2023

இன்றைய ராசி பலன் 25 ஏப்ரல் 2023

இன்று செவ்வாய் கிழமை இன்று நாள் முழுவதும் சந்திரன் மிதுன ராசியில் சுக்கிரனுடன் சஞ்சரிக்கிறார். புதன் ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ராசிகளுக்கு ஏற்ற, இறக்கமான நாளாக இருக்கும். 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட மேன்மையான பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷ ராசி

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும், இது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். ஆனால் நிதி விஷயங்களில், இன்று நீங்கள் வருமானத்தை உணர்ந்து செலவு செய்யவும்.

நீங்கள் ஒரு புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில், இன்று மேஷ ராசிக்காரர்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடலாம். இன்று அவசர அவசரமாக எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
வார ராசிபலன்: ஏப்ரல் 24 முதல் 30 வரை - மேஷம் முதல் கன்னி வரை : புதிய வேலை யாருக்கு கிடைக்கும்?

இன்றைய ராசி பலன்

ரிஷப ராசி

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று உங்கள் தொழிலுக்கு புதிய திட்டம் சிறப்பாக நிறைவேறும். அது உங்கள் தொழிலுக்கும் நன்மை பயக்கும். இன்று ஒரு பழைய நண்பர்களின் ஆலோசனை அல்லது ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் கவனமாக இருக்கவும். தேவையில்லாத பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்பத் தொழில் மேன்மை தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
புதாதித்ய யோகம் 2023 : 5 ராசிக்கு ஒரு மாதத்திற்கு வெற்றிக்கு பஞ்சமிருக்காது !

மிதுன ராசி

மிதுன ராசி

உங்கள் ராசியில் சந்திரன் சேர்க்கை நடக்கும் நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களின் செயல் உங்களுக்கு டென்ஷனைத் தரலாம். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் ஒரு சொத்து வாங்க விரும்பினால், அதற்கும் நாள் சாதகமாக இருக்கும்.

குழந்தையின்மைக்கான தீர்வு : இந்த ஜோதிட விஷயங்கள் கவனித்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

கடகம் ராசி:

கடகம் ராசி:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படலாம். சகோதரனைப் போன்ற ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

பேச்சில் மென்மையைக் கடைப்பிடிக்கவும், இது வியாபாரத்தில் லாபத்தையும், நன்மையும் பயக்கும். உங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியும். தாயின் வழியில் பண பலன்கள் கிடைக்கும்.

Vastu Tips : கணவன் - மனைவி அந்நியோன்னியம், ஆரோக்கியம் அதிகரிக்க எளிய வாஸ்து குறிப்பு இதோ

சிம்மம் ராசி

சிம்மம் ராசி

இன்று தேவைய சில விஷயங்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். இன்று நீங்கள் தொலைதூரப் பயணத்தைத் திட்டமிட்டவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். இன்று நீங்கள் வேலையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இன்று திருமண வாழ்க்கையில், ஒருவருக்கொருவர் அன்பும் நம்பிக்கையும் வலுவாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களுடனான உறவில் இனிமை இருக்கும். அக்கம்பக்கத்தில் எந்த விதமான தகராறுகளையும் தவிர்ப்பது நல்லது.

குரு பெயர்ச்சி 2023 : எந்த ராசிக்கு ராஜ வாழ்க்கை? நோய் தொற்று, விலையேற்றம் எப்படி இருக்கும்?

கன்னி

கன்னி

இன்று வியாபாரம், வேலையில் நற்பெயர் கிடைக்கும். இன்று உங்கள் எதிரிகளின் எண்ணிக்கையும் கூடும். இன்று, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மன அழுத்தம் அதிகரிக்கும். அரசியலில் முயற்சி செய்பவர்களுக்கும் இன்றைய நாள் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சில அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசி

இன்று பணியிட மாற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பழைய நண்பரை மாலையில் சந்திக்கலாம், அதனால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். இன்று உங்கள் எதிரிகள் பலமாக இருப்பார்கள். அதனால் கவனமாக எதிலும் செயல்படவும். இன்று உங்களுக்குப் பிடித்த எந்தப் பொருளையும் பரிசாகப் பெறலாம்.
 

வார ராசிபலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை - துலாம் முதல் மீனம் வரை : அதிர்ஷ்டம் யாருக்கு?

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டாம். கவனமாக எந்த செயலிலும் ஈடுபடவும். இன்று உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்து செயல்படுவீர்கள்.. அதில் உங்கள் பணமும் செலவிடப்படும். தடைப்பட்ட எந்தவொரு வணிகத் திட்டமும் இன்று ஊக்கமளிக்கும். இன்று உங்கள் மாமியார்களிடமிருந்தும் மரியாதை கிடைக்கும்.

உங்களுக்கு முதலீடு தொடர்பான வணிகம் உள்ளது, இன்று நீங்கள் சில தேவையற்ற அலைச்சல் சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உங்கள் குழந்தையின் திருமணம் சம்பந்தமாகச் சிந்திப்பீர்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

தனுசு ராசி

தனுசு ராசி

குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடு மூத்தவர்களின் தலையீட்டால் இன்று முடிவுக்கு வரும். மாணவர்கள், கல்வித்துறையினர் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு மூத்த அதிகாரியின் ஆலோசனை உதவும். சுவையான உணவை ருசிப்பீர்கள்.

மகரம் ராசி

மகரம் ராசி

கலை மற்றும் இலக்கியத் துறையில் உங்கள் முயற்சிகளில் இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வணிகம் தொடர்பான சாதகமான தகவலையும் பெறலாம். அதற்காக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இன்று உங்கள் முயற்சி எதிர்காலத்தில் தொழிலை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல உதவும். எந்த ஒரு பண பரிவர்த்தனையிலும் கவனமாக இருங்கள். கணவன்-மனைவி வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும்.

கும்ப ராசி

கும்ப ராசி

இன்று நீங்கள் மும்முரமாக உங்கள் வேலையில் ஈடுபட வேண்டியிருக்கும். யாரோ ஒருவரின் உதவியால், நீங்கள் திடீர் பண பலன்களைப் பெறலாம். உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும்.

குடும்பத்தில் சில குழப்ப நிலை நீங்கி நிம்மதி உண்டாகும். பிள்ளைகளின் கோரிக்கை நிறைவேறும். இன்று உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மீன ராசி

மீன ராசி

இன்று புதிய வருமானம் கிடைக்கும். நீங்கள் முன்னேற எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களின் ஒத்துழைப்பால், சொத்து சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் வணிகத்திற்காக நீங்கள் பயணம் செய்ய நேரிடும். தந்தையின் உடல் நலனி கவனம் செலுத்தவும். சமூகப் பணிகளில் ஈடுபாடு இருக்கும். குழந்தையைப் பார்த்தாலே மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.