சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவர்
புத்தளம் - சாலியவேவ - மேல் புலியங்குளம் - மீகஸ்வேவ பிரதேசத்தில் கால்வாய் பகுதி ஒன்றில் பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் கால்வாயில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
17 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர், இருவருடன் நிலக்கடலை பயிர் செய்கைக்கு சென்றுள்ள நிலையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மாணவர் வெளியே சென்று நீண்ட நேரம் வீடு திரும்பாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.