நுகேகொடையில் இடம்பெற்ற கோர விபத்து- CCTV காட்சிகள் இதோ..! (காணொளி)
நுகேகொடை - மேம்பாலத்திற்கு அருகில் இராணுவத்திற்கு சொந்தமான கெப்ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது பனாகொடை நோக்கி பயணித்த இராணுவ கெப்ரக வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கெப்ரக வாகனத்தின் சாரதியாக கடமையாற்றிய இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காயமடைந்த மேலும் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கொழும்பு தெற்கு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது அருகில் இருந்த CCTV கமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.