தொற்றுதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கு கொரோனா தொற்று..!

தொற்றுதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கு கொரோனா தொற்று..!

நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தங்களது குறுகிய நோக்கங்களை அடைய பொது சுகாதார பரிசோதகர்கள் முயன்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட சகல தொற்றுநோய் தடுப்பு பணிகளில் இருந்தும் நேற்று முதல் விலகியுள்ளனர்.

எனினும், தாம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 20 பேருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியானவர்களில் 9 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 678 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.