பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு- சற்றுமுன் வெளியான செய்தி
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி க.பொ.தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என்பதோடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளதோடு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை ராஜாங்கனை மற்றும் வெலிக்கந்தை ஆகிய பகுதிகளில் எந்தவொரு பாடசாலைகளையும் ஆரம்பிக்க வேண்டாம் என மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.