இன்றைய ராசி பலன் (20 ஏப்ரல் 2023)

இன்றைய ராசி பலன் (20 ஏப்ரல் 2023)

இன்றைய ராசிபலன், ஏப்ரல் 20, வியாழன் அன்று சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று சூரியன், சந்திரன், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக சேர்வதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்றைய கிரக சூழ்நிலையில் இன்று ரிஷபம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெற்றும். விருச்சிக ராசிக்காரர்கள் பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கு எப்படி பலன் இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் பணி அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு பல பொறுப்புகள் இருக்கும், அதை நீங்கள் சரியான நேரத்தில் நிறைவேற்ற முயலவும். தொழிலதிபர்களும் இன்று சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

 

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2023

Daily Rasi Palan 20.09.2022 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். இன்று நீங்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். அரசியலின் முன்னேற்றம் உண்டாகும்.

எந்த ஒரு புதிய வேலையும் தொடங்க, திட்டங்களை செயல்படுத்த சாதக நாள் இல்லை. இன்றைய வேலைகளை இன்றே முடிக்க முயலவும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயலவும். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
 

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று உங்கள் பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள், இது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் முன்பை விட அதிக உற்சாகத்துடன் வேலை செய்வீர்கள்.

இன்று பணியிடத்தில் உங்கள் மேலதிகாரியின் பாராட்டுக்களைப் பெறலாம். பதவி உயர்வுக்கு சாத்தியமுண்டு. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
 

கடக ராசி

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள், தான தர்மங்களில் பணம் செலவாகும். இன்று உங்கள் வணிகத்திற்காக எந்த முடிவை எடுத்தாலும் நல்ல பலனைப் பெறுவீர்கள். இன்று உங்கள் தொழிலில் யாரையும் நம்புவதற்கு முன் இருமுறை யோசிக்கவும். குழந்தைகளின் திருமண முயற்சிகளில் சாதக நிலை இருக்கும். இன்று உங்களின் சமூக மதிப்பு உயரும்.

 

சிம்மம்

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எதிலும் சரியான திட்டமிடல், ஆலோசனையுடன் செயல்படவும். நீங்கள் அதிகம் பணம் செலவிட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த மன கசப்பு நீங்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மிக பணிகளிலும், வழிபாடுகளிலும் அதிக ஈடுபாடு ஏற்படும். பெற்றோரின் ஆசி பெற வேண்டிய நாள். சுப காரியங்களில் பணம் செலவாக வாய்ப்புள்ளது.

மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்கள் பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலையை நிறைவேற்ற முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நடக்க வாய்ப்புள்ளது.

 

துலாம்

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் அவசரப்படுவீர்கள். பணமும் செலவாகும். கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் வருமானம் குறைவாக இருக்கும். பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது. வீண் அலைச்சல் காரணமாக மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் சிரமப்படுவீர்கள். ஆனால் மாலையில் ஓரளவு நிம்மதி கிடைக்கும். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை கழித்து நிம்மதி அடையலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நன்மை அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஈடுபடுவார்கள். வேலை அல்லது வியாபாரத்தில் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் உங்களின் வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதமாகலாம்.

இதனால் மனதில் ஏமாற்றம் இருக்கும். உங்கள் வேலையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள். எதிர்காலத்தில் அதன் பலன்களை நிச்சயம் பெறுவீர்கள். இனி வரும் காலங்களில் உங்கள் மூத்த அதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும். இன்று வியாபாரத்தில் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். உங்கள் எதிரிகள் பலமாக இருப்பார்கள், ஆனால் உங்கள் புத்திசாலித்தனத்தால் அவர்களை வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய வேலை ஒன்றை ஒரு நண்பரின் உதவியுடன் முடிக்க முடியும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்

மகரம்

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று உயர் அதிகாரிகளின் அருளால் பணியிடத்தில் மரியாதை பெறலாம். நிலம், சொத்து சம்மந்தமான எந்த ஒரு முயற்சியும் சாதகமாக இருக்கும். மாலையில் உங்கள் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்பம்

இன்று கும்ப ராசிக்கு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த தகராறு முடிவுக்கு வரும். நீங்கள் இன்று பணத்தை முதலீடு செய்ய அதற்கு நாள் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த உங்கள் நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நன்மைகளைப் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்களைச் சுற்றியுள்ள சூழலும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் தொழிலில் பணத்தை முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் குடும்பத்திற்காக ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். மாணவர்கள் இன்று படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள்