தற்கொலை குண்டுதாரி புலஸ்த்தினி எவ்வாறு தப்பி ஓடினார்? தீவிர விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலஸ்த்தினி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் எவ்வாறு தப்பி ஓடியுள்ளார் என புலனாய்வின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது;
இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு தயார இருந்து ஸாரா மற்றும் சஹ்ரானின் சகோதரர்கள் சாய்ந்தமருதில் மறைந்து தயாராக இருந்த போது தேசிய புலனாய்வு பிரிவின் தகவலாளியான லொறி சாரதி மார்ச் மாதம் 30 ம் திகதி கொழும்பில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்மாந்துறையை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை வைத்து அம்பாறை மாவட்ட தேசிய புலனாய்வு பிரிவினர் அந்த பகுதியை சல்லடைபோட்டு தேடிய நிலையில் 2019 ஏப்பில் 26ம் திகதி பொருட்களை இறக்கிய வீட்டை கண்டுபிடித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை முற்றுகையிட்ட புலனாய்வு துறையினர் கல்முனையில் மரக்கறி வியாபாரம் செய்துவந்தவரான நியாஸ் என்பவர் அம்பாறையில் சப்பாத்து தொழிற்சாலை வைத்திருப்பதாகவும் அந்த தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றுமாறு தெரிவித்ததையடுத்து அந்த தொழிற்சாலை பொருட்களை வைப்பதற்கான களஞ்சியசாலையை 5 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு வழங்கியுள்ளதுடன் அந்த களஞ்சியசாலை பூட்டியிருந்துள்ளது.
குறித்த களஞ்சியசாலையை திறப்பதற்காக வீட்டின் உரிமையாளரிமிருந்த டம்மி சாவியை பயன்படுத்தி அந்த களஞ்சியசாலையை திறக்க முற்பட்டபோது அங்கு பொலிசார் விசேட அதிரடிப்படையினர் சென்ற நிலையில் அங்கு குண்டு தயாரிப்பதற்கான வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளை மீட்கப்பட்டன.
குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னர் சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டாளைச்சேனை பகுதியில் வாடகை வீடுகள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதுடன் சம்மாந்துறையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் கராச் மட்டும் ஆயுத களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் இதே நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் இன்னொரு குழுவினர் நிந்தவூர், அட்டாளைச்சேனையில் தங்கியிருந்த வீடுகளை முற்றுகையிட்ட போது அவர்கள் அங்கிருந்து தப்பி வான் ஒன்றில் சாய்ந்தமருது வெரிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டை சென்றடைந்துள்ளனர்.
அப்போது ஸாரா என்றழைக்கப்படும் புலஸ்த்தினி 5 கிலோ எடை கொண்ட குண்டை அவரது இடுப்பில் கட்டியவாறு வானில் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஏப்பில் 26ம் திகதி மாலையில் வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் வெரிவேரியன் கிராமத்தில் ஒருவர் துப்பாக்கியால் துப்பாக்கிபிரயோகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிக்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையின் தேசிய புலனாய்வு பிரிவினர் பொலிசார் நகர்ந்தபோது அங்கு 3 குண்டு வெடிப்பு இடம்பெற்றதுடன் துப்பாக்கி சூட்டுச் சம்பவமும் இடம்பெற்ற நிலையில் சஹ்ரானின் மனைவி குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் அதில் 17 பேர் உயிரிழந்த நிலையல் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஆயுதங்களையும் மீட்டனர்.
இதன் பின்னர் இதில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி மற்றும் ஏனையவர்களிடம் சி.ஐ.டி யினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஸாராவும் இறந்து விட்டதாக தீர்மானிக்கின்றனர்.
இதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்வர்கள் தொடர்பான அவர்களை உறுதிப்படுத்துவதற்கான ஸாராவின் தாயார் வரவழைக்கப்பட்டு அவரின் இரத்தம் எடுக்கப்பட்டதுடன் ஏனையவர்களின் உறவினரது இரத்தம் எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களின் மரபணு பரிசோதனை பொருந்திய நிலையில் ஸாராவின் தாயாரின் மரபணு பரிசோதனையில் எதுவும் பொருந்த வில்லை.இரண்டாம் தரமும் பொருந்த வில்லை.
இதையடுத்து புலனாய்வு துறையினர் ஸாரா தப்பி ஓடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முடிவுக்கு வருகின்றனர்.
அதன் பின்னர் தேசிய புலனாய்வுத் துறையினர் அவரை தேடத் தொடங்குகின்றனர். அதில் முதற்கட்டமாக ஸாராவின் ஊரான மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தில் தேடியபோது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது அதில் ஸாரா உயிருடன் இருப்பதுடன் புலனாய்வு துறையினரின் கண்களிள் மண்ணைத்தூவி தப்பியுள்ளார் என தெரியவந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் 3 வீடுகளில் மாறிமாறி தங்கவைக்கப்பட்டதாற்கான நிரந்தர சாட்சி ஒன்றின் மூலம் தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து புலனாய்வு பிரிவினர் தேடிய தகவலுக்கு அமைய ஸாராவின் தாயாரின் சகோதரியான கீதாவின் கணவரின் சகோதரான தேவகுமார் இலங்கையில் ஏதே ஒரு கடற்கரைபரப்பில் இருந்து ஸாரா இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவலின் பிரகாரம் அவரை சி.ஐ.டி யினர் வீட்டில் வைத்து கைது செய்தனர் .
அதேவேளை முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் ஸாராவின் குடும்பத்துடன் ஒட்டி உறவாடி உண்டு மகிழ்ந்து உறவை இறுதிவரை பேணிவந்த நிலையில் மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த ஸாராவை அவர் காரில் ஏற்றி சென்றுள்ளார் என தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த நிரந்தர சாட்சி ஒன்றின் தகவலின் பிரகாரம் அவரை அக்கரைப்பற்றில் அவரது வீட்டில்வைத்து கடந்த 13 ம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி. யினர் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு பிரிவின் தகவல்களின் அடிப்படையில் ஸாரா அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு ஓடியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் இதனுடன் தொடர்புபட்ட பலர் மிக விரைவில் கைது செய்யப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.