தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிஷேச நேரங்கள்!!
தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது.
புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.
சோபகிருது வருடம்
சோப கிருது என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் மங்கலம் என்ற தமிழ் பெயர் உள்ளது.
அதனால் இந்தாண்டு மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
அந்த வகையில் சித்திரை புத்தாண்டு அன்று மருத்துணீர் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டு பெரியவர்களிடம் இருந்து கைவிசேடம் வாங்கும் நிகழ்வு வரை நிகழும்.
மேலும் இந்த முறைகளை எந்த நேரத்தில் எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
வருடம் பிறக்கும் நேரம்
14.04.2023 - வெள்ளிக்கிழமை பி.ப 02.03.2023
புண்ணிய காலம்
14.04.2023-மு.ப 10.03 முதல் பி.ப 06.03 வரை காலத்தில் சிரசில் கொன்றை இலையும் காலில் புங்கம் இலையும் வைத்து குளிக்க வேண்டும்.
அணியும் ஆடைகள்
வெள்ளை நிறமுள்ள பட்டாடை மற்றும் வெள்ளை கறையமைந்த ஆடையும் அணிய வேண்டும்.
அணியும் ஆபரணம்
முத்து மற்றும் வைரம் பதிந்த ஆபரணங்களை அணிய வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
ரோஹினி, மிருகசீர்டம் 3ம் 4ம் கால்கள், திருவாதிரை, புனர்பூசம் 1ம் 2ம் 3ம் கால்கள், அத்தம், உத்தராடம் 2ம் 3ம் 4ம் கால்கள், திருவோணம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துநீர் தேய்த்து குளித்து தருமங்கள் செய்தால் நல்லது.
கைவிஷேடம்
15.04.2023 - மு.ப 07.52 முதல் மு.ப 09.00 மணி வரை 16.04.2023 - மு.ப 07.49 முதல் மு.ப 09.48 மணி வரை
இந்த நேரத்தின் படி அனைத்து கருமங்களையும் செய்தால் இந்த ஆண்டு சிறப்பான அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.