ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை- சற்றுமுன் வெளியான செய்தி

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை- சற்றுமுன் வெளியான செய்தி

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு இடையில் கொழும்பு நோக்கிய ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.