முகக்கவசங்கள் இன்றி பொலிஸாரிடம் சிக்கினால் விசேட கவனிப்பு!
ஸ்ரீலங்காவில் முகக்கவசங்கள் இன்றி பயணிக்கும் நபர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகள் நடத்தவுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அசட்டையீனமாக நடந்து கொள்வதாலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி முகக்கவசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.