‘ரொக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்

‘ரொக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்

பாடகி ‘ரொக்ஸ்டார்’ ரமணியம்மாள் இன்று (4) காலமானார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பின்னணி பாடகி ரமணியம்மாள் (69) வயது மூப்பால் காலமானார்.

'ஸீ தமிழ்' தொலைக்காட்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்குபற்றிய ரமணியம்மாள், மக்களின் மனதில் இடம் பெற்றார்.

அதில் தொடர்ந்து பாடி, இரண்டாமிடத்தைப் பெற்று, அதற்காக பரிசும் பெற்றுள்ளார்.

இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரை ரொக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.

இவர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் 'தண்டட்டி கருப்பாயி...' என்ற பாடலை பாடி அறிமுகமானவர்.

'காத்தவராய சாமி...' (காத்தவராயன்), 'வெள்ளைக்குதிரை...'(ஹரிதாஸ்), 'ரைஸ் ஒஃப் ஜூங்கா...'(ஜூங்கா), 'செங்கரட்டான் பாறையில...' (சண்டக்கோழி 2), 'இன்டர்நெட் பசங்க...'(நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா), 'சிறுக்கி...'(காப்பான்) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.