சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்து 33,037 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8,539ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரையில் மொத்தமாக 38 இலட்சத்து 96,855 பேர் குறித்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 1 இலட்சத்து 43,269 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 40,243 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனூடாக அங்கு மொத்தமாக 11 இலட்சத்து 18,107 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.