இன்றைய தினமும் இடம்பெறவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்பு
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினமும் இடம்பெறவுள்ளது
தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது
கடந்த தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்றும், நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் வாக்களிக்க செல்லுபவர்கள் தங்களது தேர்தல் மாவட்டங்களின்; மாவட்ட செயலகங்களில் அஞ்சல்மூல வாக்கினை செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவு, தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், அரச துறையினர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களாக அஞ்சல் மூல வாக்கினை செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த அஞ்சல் மூல வாக்கினை செலுத்த தவறியவர்களுக்கு இன்றும், நாளையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 90 வீதமானவர்கள் அஞ்சல்மூல வாக்கினை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
அதே நேரம் கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 93 விதமான வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.