அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி மாவட்டத்திற்கான பஸ் விநியோக வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.