காதலியுடன் நீராடிக்கொண்டிருந்த காதலனுக்கு நேர்ந்த விபரீதம்
நெலுவ-லங்காகமவில் அமைந்துள்ள தூவிலி எல்லவில் தனது காதலியுடன் நீராடிக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (19) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வெள்ளவத்தை-மெல்பன் பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பிரதேச மக்களும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த நபரின் சடலம் நெலுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகள் காலி கராபிடிய மருத்துவமனையில் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.