ரஜினி மகள் வீட்டில் திருடி ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய ஈஸ்வரி.. மேலும் பல திடுக் தகவல்..!

ரஜினி மகள் வீட்டில் திருடி ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய ஈஸ்வரி.. மேலும் பல திடுக் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய ஈஸ்வரி என்பவர் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி உள்ளார் என்றும் அவர் திருடிய நகைகளின் மதிப்பு ஒரு சில கோடிகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் சோழிங்கநல்லூரில் ரூபாய் 95 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி மொத்த பணத்தையும் கொடுத்து வீடு வாங்கினால் சந்தேகம் வரும் என்பதற்காக அவர் வங்கியில் கடன் வாங்கி அதன் பிறகு அந்த கடனை இரண்டே வருடத்தில் அடைத்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் அவர் விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து அந்த நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து 100 சவரன் நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் இந்த குற்றச்செயலுக்கு ஐஸ்வர்யா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேஷ் என்பவரும் உடந்தை என்பதை அடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி ரூபாய் ஒரு கோடிக்கு வீடு வாங்கிய ஆவணம் மற்றும் அவர் திருடிய நகைகளை எல்லாம் போலீசார் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.