கொழும்பு அட்டன் பிரதான வீதியில் விபத்து ஐந்து வயது சிறுமி பலி

கொழும்பு அட்டன் பிரதான வீதியில் விபத்து ஐந்து வயது சிறுமி பலி

கொழும்பு - அட்டன் பிரதான வீதியின் இங்கிரியாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் சிற்றூந்து ஒன்றும் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, கர்ப்பிணிப் பெண், மற்றும் அவரின் புதல்வி ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட மூவரில் ஐந்து வயதுடைய சிறுமி கரவநெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.