வாக்குச் சீட்டை புகைப்படமெடுத்த ஆசிரியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
தபால் மூல வக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்த ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 15ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற போது தான் புள்ளடியிட்ட வாக்குச் சீட்டை தனது கையடக்க தொலைபேசியில் படம் எடுத்த போது அங்கிருந்த அதிகாரிகளினால் அவர்கைது செய்யப்பட்டு அவரின் கையடக்க தொலைபேசி அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டது.
தான் தனது இளைய மகனுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவே இந்த படத்தை எடுத்ததாக அந்த ஆசிரியர் கூறிய போதும் தேர்தல்கள் சட்டத்தின்படி புகைப்படம் எடுத்தல் தடை செய்யப்பட்டது என்பதால் அவருக்கு எதிராக தேர்தல் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அது தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளனர்.