இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடரூந்து ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள், தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.