ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி யான் ஓயா காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யான் ஓயா பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக தேன் எடுக்கச் சென்ற சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை கட்டிக்கொள்ள நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு பார்வையிடச் செல்ல உள்ளதாகவும், குறித்த சடலம் யாருடையது என்பதை விசாரணை செய்து வருவதாகவும், கொலையா அல்லது தற்கொலையா பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.